பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday 2 April 2021

 இஸ்லாமிய பொருளாதாரச் சிந்தனை


 ஆசிரியர் : அதிரை. இப்ராஹீம் அன்சாரி

விலை : 110/-

பக்கங்கள் : 176
-----------------
வெளியீடு : சாஜிதா புக் சென்டர், சென்னை - 600 001.
போன் : 98409 77758 / (044) 2522 4821
-----------------
இந்நூலின் உள்ளே....
கடனுக்காக அடமானமாக ஒரு பொருளை பெற்றுக்கொண்டு கடன் கொடுக்கல் வாங்கலை இஸ்லாம் அனுமதிக்கிறது. கடனை வாங்கும் போதே திருப்பித்தரும் எண்ணத்துடனும் திட்டத்துடனும் வாங்க வேண்டும். தேவை ஏற்படாமலேயே கடன் வாங்கும் அளவுக்கு மக்களின் மனதை தூண்டக்கூடிய வட்டியின் இன்னொரு வடிவமாக விளங்கும் கடன் அட்டைகளை தடை செய்ய வேண்டியதன் அவசியத்தை ஆசிரியர் இஸ்லாமியப் பார்வையில் தெளிவாக விளக்குகிறார். கடனை திருப்பி செலுத்த தகுதியற்ற - சக்தியற்றவர்களுக்கும் பொறுப்பற்ற முறையில் கடன் வழங்கிவிட்டு, கடன் நெருக்கடியை ஏற்படுத்திய ஏகாதிபத்ய அமெரிக்க வங்கிகளின் லாப வேட்கைக்கு முற்றிலும் மாறான வட்டி இல்லாத பொருளியல் முறையை முன்மாதிரியாக இஸ்லாம் கொண்டுள்ளதை இந்நூல் ஆசிரியர் கூறும் கடன் பற்றிய நபிமொழிகள் மற்றும் இறைமறையின் வசனங்கள் மூலம் அறியலாம்

No comments:

Post a Comment

readers

Blogger Wordpress Gadgets