பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

புதிய வெளியீடுகள்


அல்அதபுல் முஃப்ரத் (மூலமும்-தமிழாக்கமும்)



நம்பிக்கையாளர்களின் அன்னையர்





இளம் வயது சஹாபாக்கள்


முத்தும் பவளமும்




ஒரு புத்த பிட்சுவின் இஸ்லாமிய தேடல் 



இனிய நபிமொழிகள் 200



சொர்க்கம் செல்ல எளிய வழி 




முஸ்லிம் மன்னர்கள் ஆண்ட இந்தியா 





மானுடம் வென்ற உமர் (ரழி) 





சொர்க்க சான்று பெற்ற பத்து சஹாபாக்கள்


இறைவன் தங்களுக்கு கொடுத்துள்ள நேரத்தை, உழைப்பாற்றலை, உடல் வலுவை, கல்வியை, அறிவை, மதிக்கூர்மையை, திறமையை, மக்கள் செல்வாக்கை, செல்வத்தை, பேச்சாற்றலை... இப்படி அனைத்தையும் நபித்தோழர்கள் இறைவனுடைய வாக்கை மேலோங்கச் செய்யும் பணியில் ஈடுபடுத்தினார்கள். கைவசம் இருக்கும் கடைசிப் பொருளையும் கொடுக்கத் தயார் என்பதை இறைவனுக்கு உணர்த்தினார்கள். விளைவு? இறைவன் அவர்களைப் பொருந்திக் கொண்டான். ரழியல்லாஹு அன்ஹும்!



அண்ணல் நபி (ஸல்) அழகிய வரலாறு


அண்ணல் நபியைப் பற்றிய வரலாற்று நூல்கள் ஆயிரக்கணக்கில் வெளியாகியுள்ளன. தமிழிலும் நூற்றுக்கணக்கில் வெளியாகி இருந்தாலும், அவற்றில் சில நூல்களே சிறப்பான செய்திகளைச் சொல்கின்றன. அவ்வரிசையில் இந்நூலும் சிறப்பான இடத்தைப் பிடிக்க வேண்டும் என விரும்புகிறோம். அதற்கான பணிகளை இந்நூலாசிரியர் நன்றாகவே செய்துள்ளார் என்பதை நூலைப் படிப்பவர் உணரலாம். அண்ணலார் காலத்துக்கு முந்திய நிலைமைகள், அண்ணலார் கால நிலைமைகள் என செய்திகள் விரிந்து இஸ்லாமிய எழுச்சி வரை நூல் பல்வேறு சங்கதிகளைப் பேசுகிறது.


உமர் முக்தார்


"நான் உமர் முக்தார் சினிமாவை ஏற்கனவே பார்த்துள்ளேன். அதை மிகவும் ரசித்துள்ளேன். ஆனால் நாவலர் தந்துள்ள எழுத்து வடிவத்துக்கு முன்னால் சினிமா மிக சாதாரணமான ஒன்றாகிப் போய்விட்டது."
கலைஞர் மு.கருணாநிதி


எனது பயணம் (ROAD TO MAKKAH)



சிலுவைப் போருக்கு சில நூறு ஆண்டுகளுக்கு முன்னமே ஐரோப்பியக் கிறித்தவர்களுக்கு இஸ்லாத்தின் மீதான வெறுப்பு முகிழ்க்கத் தொடங்கிவிட்டது. சிலுவைப் போர் அந்த வெறுப்பை நிலைப்படுத்திவிட்டது. இன்று வரை அந்த வெறுப்பும் அருவெருப்பும் இஸ்லாத்தின் மீதும், ஏகத்துவத்தின் மீதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் மனத்தில் தலைமுறை தலைமுறையாய் வேரூன்றி வருகிறது.
இந்த நிலையில்தான் பிரபல அய்ரோப்பிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான லியோ போல்டு வில் அரபியப் பாலைவன நாடுகளில் நுழைகிறார். அந்த மக்களிடம் பழகுகிறார். அரபிய இஸ்லாமிய கலாச்சாரத்தை நுகர்கிறார். இஸ்லாத்தில் கரைந்து போகிறார். சவுதி மன்னர் முதல் சாதாரண அரபு ஒட்டக ஓட்டி வரை இசைவுடன் அவரோடு பழகுகின்றனர்.
அல்லாஹுத்தஆலாவின் பேருதவியோடு Road to Makkah  என்கிற இந்தத் தன் வரலாற்றுக் காவியத்தை இயற்றி முடித்தார். இந்த நூல் அய்ரோப்பிய அறிவாளிகளின் மனத்தில் இஸ்லாம் பற்றிப் படர்ந்திருந்த அறியாமை இருளை முழுமையாக நீக்கியது. ஆம்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றியும், அரபியர் பற்றியும், இஸ்லாமிய வாழ்நெறி பற்றியும் உலகம் அறிந்துகொள்ள வேண்டிய  அனைத்துச் செய்திகளின் நேரடி அனுபவ அறிவிப்பாகத் திகழ்கிறது இந்நூல்.
- அணிந்துரையில் டாக்டர் அப்துல்லாஹ்


இஸ்லாமிய வழியில் நேர நிர்வாகம்



இந்நூல்...
* நேரத்தின் உண்மையான மதிப்பை உணர்த்துகிறது.
* நேரம் அல்லாஹ்வின் அருள் என்பதை ஆதாரங்களுடன் விவரிக்கிறது.
* கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் வருங்காலத்தை முஸ்லிம்கள் எவ்வாறு அணுக வேண்டும் என்பதை விரிவாக எடுத்துரைக்கிறது.
* இஸ்லாமிய ரீதியில் நேரத்தை திட்டமிட்டு எவ்வாறு செலவழிப்பது என்பதற்கும் வழி காட்டுகிறது.


பல்வேறு மத நூல்களில் முஹம்மது நபி (ஸல்)


இஸ்லாம் ஒரு புதிய மதம் என்றும், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அதன் ஸ்தாபகர் என்றும் சிலர் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இஸ்லாம் காலம் தோன்றிய பொழுதே தோன்றிய ஒரு மார்க்கமாகும். மனித இனம் அனைத்துக்கும் இஸ்லாம் மார்க்கத்தின் இறுதித் தூதராக முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைவன் அனுப்பினான். 

ஆசிரியர் : டாக்டர் ஜாகிர் நாயக்


நபித்தோழர்கள் தியாக வரலாறு



கடந்தகால வரலாற்றை மறந்த சமுதாயம் நிகழ்காலத்தை நெறிப்படுத்தவும், ஒளிமயமாக்கவும் முடியாது. இந்த வகையில் வரலாறு என்பது முக்கியத்துவம் பெறுகின்றது. குறிப்பாக இஸ்லாத்தின் உயர்வையும், அந்தஸ்தையும் உரிய முறையில் அறிய வேண்டுமென்றால் நபி (ஸல்) அவர்கள் துவக்கம் முதல் இன்றைய தினம் வரை இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக தமது உதிரத்தையும், உயிரையும், உடல் உறுப்புகளையும், உழைப்பையும் உரமாகப் பாய்ச்சியவர்களின் வரலாற்றைத் தெரிந்திருப்பது அவசியமாகும்.




இஸ்லாமிய இல்லறம்



இந்நூல் திருமண ஒப்பந்தம் செய்தல், பெண் பார்த்தல், பெண்ணுக்கு மஹ்ர் கொடுத்தல், வலீமா-விருந்து கொடுத்தல், ஆகுமான திருமணங்கள், தடை செய்யப்பட்ட திருமணங்கள் போன்ற பல்வேறு விஷயங்களையும், உடலுறவில் இஸ்லாமிய ஒழுக்கங்கள், தடுக்கப்பட்ட உடலுறவுகள், கடமையான குளிப்பு, கட்டாயம் மறைக்க வேண்டிய பகுதிகள், விபசாரம், ஓரினச் சேர்க்கை மற்றும் குடும்பக்கட்டுப்பாடு போன்ற விஷயங்களையும் அழகிய உறவு, நற்குணங்கள், ஒருவருக்கொருவர் உதவுதல், கணவன்-மனைவி கடமைகள், உரிமைகள் போன்ற பல்வேறு விஷயங்களைத் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் ஆதாரங்களோடு கூறுகிறது.

No comments:

Post a Comment

readers

Blogger Wordpress Gadgets