பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Monday 23 August 2021

 நூல் பெயர் : அல்குர்ஆன் - ஓர் ஆழ்நிலைப் பார்வை

========================================
ஆசிரியர் : கெக்கிராவ ஸஹானா
----------

விலை : ரூ. 90/-
----------
வெளியீடு : புதிய சமுதாயம் பதிப்பகம்,
கோயம்புத்தூர்.
----------
கிடைக்குமிடம் : சாஜிதா புக் சென்டர்
248, தம்புச் செட்டி தெரு, மண்ணடி, சென்னை - 600 001.
போன் : (044) 2522 4821 / 98409 77758
----------
98409 77758 என்ற எண்ணிற்கு கூகுள் பே மூலமாகவும் பணம் செலுத்தலாம்.
----------
வங்கி விவரம் :
SHAJIDA BOOK CENTRE,
INDIAN OVERSEAS BANK
A/C.NO : 030502000005161 - MUTHIALPET BRANCH
(IFSC CODE : IOBA0000305)
----------
ஒரு பெண் பல்வேறு பரிமாணங்களில் இந்தச் சமுதாயத்திற்குப் பங்களிப்புச் செய்கிறாள். தாயாக, தாரமாக, சகோதரியாக, அண்ணியாக, மாமியாக, மகளாக முதலான பல்வேறு பரிமாணங்களில் பங்களிப்புச் செய்தாலும் தாய் என்ற உறவே ஒவ்வோர் ஆணுக்கும் தவிர்க்க முடியாத உறவு. அந்த உறவில் ஓர் ஆண் தன் தாய்க்கு ஆற்றுகின்ற பணி மகத்தானது. எனவே ஒவ்வோர் ஆணும் தாயைப் போற்ற வேண்டிய முறைப்படி போற்றி, ஆற்ற வேண்டிய பணிவிடைகளை ஆற்றி, அந்தத் தாயின் பிரார்த்தனைகளைப் பெற்றுவிட்டால் அவனுக்கு அதுவே ஈருலக நற்பாக்கியத்தையும் பெற்றுத் தந்துவிடும். அல்லாஹ்வின் அருளால் இவ்வுலகிலும் நிம்மதியாக வாழலாம். மறுமையில் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்று, சொர்க்கத்தில் இடம்பிடித்து நிரந்தரமான வாழ்க்கை வாழலாம். இவ்வாறு பெண்கள் குறித்த பல்வேறு செய்திகளைப் பல்வேறு கோணங்களில் சின்னச் சின்னத் தலைப்புகளில் சிறுசிறு கட்டுரைககளாக எடுத்துரைக்கிறார்.
அன்புடன்
நூ. அப்துல் ஹாதி பாகவி

No comments:

Post a Comment

readers

Blogger Wordpress Gadgets