பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday 4 October 2013

கலீஃபாக்கள் வரலாறு


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அடுத்தபடியாக இஸ்லாமிய வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடிப்பவர்கள் நேர்வழி பெற்ற முதல் நான்கு கலீஃபாக்கள்.
வரலாறு தெரியாமல் வாழ்ந்த மக்களை வரலாற்றின் கதாநாயகர்களாக மாற்றிய பெருமை இஸ்லாத்திற்கே உண்டு. சாதாரணமாக தங்களின் வாழ்க்கையை ஆரம்பித்தவர்கள் இன்று உலக மக்கள் அனைவருக்கும் உதாரணப் புருஷர்களாக திகழ்கிறார்கள். இன்றைய அரசியல்வாதிகள் இவர்களின் வாழ்க்கையைப் புரட்டினால் தங்களின் அரசியல் வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைத்து விடுவார்கள்.
குகையில் இருவரில் ஒருவர், நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே தொழுகைகளை முன்னின்று நடத்தியவர், ஹஜ்ஜிற்கு தலைமை ஏற்று சென்றவர் என பல சிறப்புகளைப் பெற்ற அபூபக்ர் (ரழி) நபி (ஸல்) அவர்களுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறார்கள். 
இரண்டாவது கலீஃபா உமர் (ரழி) அவர்களின் பெயரைக் கேட்ட உடனேயே இவர்களின் ரோஷம்தான் நமது நினைவுக்கு வரும். இவர்களின் ரோஷத்தையும் இஸ்லாத்தைவிட்டுக் கொடுக்காதத் தன்மையையும் விவரிக்கும் சம்பவங்களை படிக்கும்போது நமது வாசிப்பின் வேகமும் கூடத்தான் செய்கிறது. அதேசமயம் இவர்களின் கருணை குணத்தையும் கோடிட்டுக் காட்ட ஆசிரியர் தவறவில்லை. 
உதுமான் (ரழி) அவர்களின் கொடை தன்மையை சற்று விவரித்த பின் அவர்களின் ஆட்சியைக் குறித்து ஆசிரியர் கூறியுள்ளார். அன்னாரின் காலத்தில் ஏற்பட்ட குழப்பங்களும், அவர்களின் மரணமும் அந்த சந்தோஷத்தை மங்கச் செய்து நமது நெஞ்சை வாட்டுகின்றன. யூதர்களின் சூழ்ச்சிகளும், குழப்பங்களும் நமக்கு நல்லதொரு படிப்பினையாக அமைகின்றன. 
இறுதியாக அலீ (ரழி) அவர்களின் சிறப்புகளை விவரித்த பின் அவரது ஆட்சிக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் ஆசிரியர். தோளோடு தோள் நின்ற ஸஹாபாக்கள் ஒருவரையொருவர் எதிர்த்து வாளேந்தினார்கள் என்பதைப் படிக்கும் நமது கண்கள் குளமாகின்றன. 

No comments:

Post a Comment

readers

Blogger Wordpress Gadgets