பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday 4 October 2013

ரியாளுஸ்ஸாலிஹீன்

ரியாளுஸ்ஸாலிஹீன் (நன்மை விரும்பிகளின் நந்தவனம்)



• ஒரு முஸ்லிம் தன் வாழ்வில் பின்பற்ற வேண்டிய அவசியத்திலும் அவசியமான போதனைகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுக்கப் பட்டிருக்கிறது.
• பிரமிப்பூட்டும் ஆறு ஹதீஸ் புத்தகங்களைப் புரட்ட வேண்டிய நிலை இதன்மூலம் எளிதாக்கப் பட்டுள்ளது.
• இந்தியா - இலங்கை தேசங்களைச் சேர்ந்த அறிஞர்கள் இந்நூலுக்கு மதிப்புரை வழங்கி, நூலைப் பற்றிய நல் அறிமுகத்தை தந்திருக்கின்றனர்.
• மார்க்கத்தை எளிய வடிவில் விளக்குவதற்கும், மதரஸாக்களில் வகுப்பெடுப்பதற்கும் இந்நூல் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை.
• ஆதாரத் தொகுப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட அரிய செய்திகளைக் கூறும் இந்நூல் “நன்மை விரும்பிகளின் நந்தவனம்”.
• இறையில்லங்கள் தோறும் இருக்க வேண்டிய அறிவுக் களஞ்சியம்.


நன்றி : மக்கள் உரிமை - அக்டோபர் 2006

நபிமார்கள் வரலாறு


இறைத்தூதர்களான) அவர்களின் இவ்வரலாறுகளில் பகுத்தறிவுடை யோருக்கு அரிய படிப்பினை உள்ளது. (குர்ஆனில் விவரித்துக் கூறப்படுகின்ற) இச்செய்திகள் புனைந்துரைக்கப்பட்டவை அல்ல. மாறாக, இந்த குர்ஆன் தனக்கு முன் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பிக்கக் கூடியதாகவும், ஒவ்வொன்றையும் விவரிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது. மேலும் நம்பிக்கை கொள்ளும் சமூகத்தாருக்கு நேர்வழியாகவும், அருளாகவும் திகழ்கின்றது. (அல்குர்ஆன்-12:111)

கலீஃபாக்கள் வரலாறு


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அடுத்தபடியாக இஸ்லாமிய வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடிப்பவர்கள் நேர்வழி பெற்ற முதல் நான்கு கலீஃபாக்கள்.
வரலாறு தெரியாமல் வாழ்ந்த மக்களை வரலாற்றின் கதாநாயகர்களாக மாற்றிய பெருமை இஸ்லாத்திற்கே உண்டு. சாதாரணமாக தங்களின் வாழ்க்கையை ஆரம்பித்தவர்கள் இன்று உலக மக்கள் அனைவருக்கும் உதாரணப் புருஷர்களாக திகழ்கிறார்கள். இன்றைய அரசியல்வாதிகள் இவர்களின் வாழ்க்கையைப் புரட்டினால் தங்களின் அரசியல் வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைத்து விடுவார்கள்.
குகையில் இருவரில் ஒருவர், நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே தொழுகைகளை முன்னின்று நடத்தியவர், ஹஜ்ஜிற்கு தலைமை ஏற்று சென்றவர் என பல சிறப்புகளைப் பெற்ற அபூபக்ர் (ரழி) நபி (ஸல்) அவர்களுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறார்கள். 
இரண்டாவது கலீஃபா உமர் (ரழி) அவர்களின் பெயரைக் கேட்ட உடனேயே இவர்களின் ரோஷம்தான் நமது நினைவுக்கு வரும். இவர்களின் ரோஷத்தையும் இஸ்லாத்தைவிட்டுக் கொடுக்காதத் தன்மையையும் விவரிக்கும் சம்பவங்களை படிக்கும்போது நமது வாசிப்பின் வேகமும் கூடத்தான் செய்கிறது. அதேசமயம் இவர்களின் கருணை குணத்தையும் கோடிட்டுக் காட்ட ஆசிரியர் தவறவில்லை. 
உதுமான் (ரழி) அவர்களின் கொடை தன்மையை சற்று விவரித்த பின் அவர்களின் ஆட்சியைக் குறித்து ஆசிரியர் கூறியுள்ளார். அன்னாரின் காலத்தில் ஏற்பட்ட குழப்பங்களும், அவர்களின் மரணமும் அந்த சந்தோஷத்தை மங்கச் செய்து நமது நெஞ்சை வாட்டுகின்றன. யூதர்களின் சூழ்ச்சிகளும், குழப்பங்களும் நமக்கு நல்லதொரு படிப்பினையாக அமைகின்றன. 
இறுதியாக அலீ (ரழி) அவர்களின் சிறப்புகளை விவரித்த பின் அவரது ஆட்சிக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் ஆசிரியர். தோளோடு தோள் நின்ற ஸஹாபாக்கள் ஒருவரையொருவர் எதிர்த்து வாளேந்தினார்கள் என்பதைப் படிக்கும் நமது கண்கள் குளமாகின்றன. 

சஹாபாக்கள் வரலாறு


இஸ்லாமிய மார்க்கத்தின் சஹாபாக்களை பற்றி இந்நூல் சிறப்பாக கூறுகின்றது

உமர் கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு)




வீரமறவர்களாக திகழ்ந்த பல பல மனிதர்களை வரலாற்றில் காணலாம். ஆனால், அவர்களிடம் ஒழுக்கச் சிறப்பு ஒன்றுகூட இருக்காது. ஒழுக்கத்தில் உயர்ந்த மானுடர் பலர் இருப்பர். ஆனால், அவர்கள் விவேகிகளாகவோ, மதியூகிகளாகவோ இருக்கமாட்டார்கள். இருபெரும் பண்புகளையும் ஒருங்கே பெற்றவர்கள் இருக்கக்கூடும். ஆனால் அவர்களிடம் கல்வியும், அறிவுச் சிறப்பும் அறவே காணப்படாது. உமரவர்களின் வாழ்க்கையை பல்வேறு கோணங்களிலும் சீர்தூக்கி பார்க்கும்போது அவர்கள் அலெக்ஸாண்டராகவும் இருந்துள்ளார்கள், அரிஸ்டாட்டிலாகவும் இருந்துள்ளார்கள். ஸுலைமானாகவும் இருந்துள்ளார்கள். மஸீஹாகவும் (இயேசு) விளங்கியுள்ளார்கள். தைமூராகவும் திகழ்ந்துள்ளார்கள், நவ்ஷீர்வானாகவும் விளங்கியுள்ளார்கள்.

நேர்முக வர்ணனை (ஷமாயிலுத்திர்மிதீ)



சிலைகளாக செதுக்கப்பட்டவர்கள், படங்களாக வரையப்பட்டவர்கள் பற்றிய முழு சித்திரம் கிடைக்காத நிலையில் சிலைகளுக்கும், படங்களுக்கும் தடை செய்த நபி (ஸல்) அவர்களுடன் சம்பந்தப்பட்ட துரும்புகூட வரலாற்றில் இடம் பிடித்திருப்பது உலக அதிசயமாகும்.
நபி (ஸல்) அவர்களை உயிரினும் மேலாக நேசிக்கும் முஸ்லிம் சமுதாயம் அவர்களை மனக்கண்ணால் பார்க்க விரும்பினால் அதற்கு இந்நூல் துணை புரியும்.

ஹிஸ்னுல் முஸ்லிம் - முஸ்லிமின் அரண்


ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாத்தின் கடமைகள்-நெறிமுறைகள் என்னைப் பொறுத்து மிகவும் அதிகமாகிவிட்டன. நான் கடைபிடித்து நிரந்தரமாக செய்வதற்கு ஒரு விஷயத்தை எனக்கு நீங்கள் கற்றுத் தாருங்கள். நான் அதை உறுதியாகப் பற்றிக் கொள்வேன்" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உமது நாவு எப்போதும் அல்லாஹ்வின் திக்ரில் ஈடுபட்டு பசுமையாக இருக்கட்டுமாக!" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு புஸ்ர் (ரழி)
நூல் : திர்மிதீ

அழகிய முஸ்லிம் பெயர்கள்



தமிழகத்தில் குழந்தைகளுக்கான பெயர்களை கொண்ட பல நூல்கள் வெளிவந்துவிட்டன. எனினும் தமிழ் அகர வரிசைப்படி இந்நூல் அமைந்திருப்பது இதன் தனிச் சிறப்பு. மேலும் இந்நூலில் குழந்தை வளர்ப்பு முறைகள், அகீகா சட்டங்கள் என அனைத்தும் இடம்பெற்று ஒரு முழுமையான நூலாக உருவாகியுள்ளது. தமிழ், ஆங்கிலம், அரபி மற்றும் பொருளுடன் ஆண், பெண் குழந்தைகளுக்கான இரு எழுத்துப் பெயர்கள் 3,4,5,6,7 எழுத்துப் பெயர்கள் என வரிசைப்படுத்தி தரப்பட்டுள்ளது.

குழந்தை வளர்ப்பு என்னும் இஸ்லாமிய கலை


ஒரு தலைமுறை சீர்கெட்டுப் போனால் அதனால் ஏற்படும் எல்லா விளைவுகளுக்கும் நாம் காரணமாக மாறிவிடுவோம். இந்த உள்ளச்சம் நம் உள்ளத்தில் என்றென்றும் இருந்தாக வேண்டும். நம்முடைய குழந்தைகளை மிகப்பெரிய சான்றோர்களாக, சாலிஹீன்களாக, எதிர்காலத்தில் உலகாளும் ஆட்சியாளராக, டாக்டர்களாக, இன்ஜீனியர்களாக, அறிவிலும், கல்வியிலும் தலைசிறந்தவர்களாக, தகுதி படைத்தோராக உருவாக்க வேண்டும் என்றால் நம்முடைய குழந்தைகள் முதலில் நல்ல மனிதர்களாக உருவாக வேண்டும். ஓரிறைவனை நம்புகின்ற உண்மையான வாழ்க்கையான மறுமை வாழ்க்கைக்கு பயப்படுகின்ற நல்லொழுக்கம் நிரம்பியவர்களாக மனிதன் என்னும் சொல்லிற்கு முற்றிலும் பொருந்துபவர்களாக உருவாக வேண்டும் என்பதற்காகவே இந்நூலை வெளியிடுகின்றோம்.
Blogger Wordpress Gadgets