பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday 11 November 2020

 அல்லுவுலுவு வல்மர்ஜான் (அரபி மூலமும் - தமிழாக்கமும்)



 நபிகள் நாயகம் அழகிய வரலாறு



 இறையச்சத்தின் இலக்கணம் யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம்



வானவர்கள்


 

♦️ பெரியார் இஸ்லாமை ஏற்றாரா? எதிர்த்தாரா?
♦️ இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து


 நம்பிக்கையாளர்களின் அன்னையர்



 நபிகளார் கூறும் நல்லொழுக்கங்கள்



 நூல் பெயர் : ஷமாயிலுத் திர்மிதி

(நபிகள் நாயகம் (ஸல்) நேர்முக வர்ணனை)


 மனிதருள் மாணிக்கம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்



 ஹிஸ்னுல் முஸ்லிம் - முஸ்லிமின் அரண்

(குர்ஆன் ஹதீஸில் வந்துள்ள திக்ருகள்-பிரார்த்தனைகள்)


 இஸ்லாமும் பெண்ணினமும்



 

முஸ்லிம் மன்னர்கள் ஆண்ட இந்தியா


 அல் அஸ்மா வஸ்ஸிஃபாத்



 இஸ்லாமிய உண்மைக் கொள்கை - அடிப்படைகளும் முரணானவையும்



 


 


 இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டங்கள்



 குழந்தை மனசு

(உளவியல் கண்ணோட்டத்துடனும், இறைவழி சிந்தனையுடனும் நவீன யுகத்தில் குழந்தைகளை வளர்ப்பதற்கு ஒவ்வொரு பெற்றோரும் படித்து பாதுகாக்க வேண்டிய நூல்.


 

🐅 தென்னாட்டு வேங்கை திப்பு சுல்தான்



 பாவமன்னிப்பு



 அருள் வடிவானவர்



 இஸ்லாமிய பொருளாதாரச் சிந்தனை



 முதல் மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம்



 இறைநம்பிக்கை கொண்டோரே!



 மானுடம் வென்ற உமர் (ரழி)



 நபிவழி தொழுகை



 குழந்தைகளுக்கான நீதிக்கதைகள்



 ரத்த சரிதம் - ஃபலஸ்தீன் போராட்ட வரலாறு !




 இறைநம்பிக்கையாளர்களின் அன்னை கதீஜா ரழியல்லாஹு அன்ஹா

நபிவழி மருத்துவம்



 நபிவழி மருத்துவம்

------------
ஆசிரியர் : பேரறிஞர் அபீபக்ர் இப்னு கய்யிம் (ரஹ்)
------------
தமிழாக்கம் : முனைவர் மௌலவி. நூ.அப்துல் ஹாதி பாகவி. பிஎச்.டி.
------------
விலை : ரூ. 350/-
------------
பக்கங்கள் : 528
-----------------
வெளியீடு : சாஜிதா புக் சென்டர், சென்னை - 600 001.
போன் : 98409 77758 / (044) 2522 4821
--------------------
98409 77758 என்ற எண்ணிற்கு கூகுள் பே மூலமாகவும் பணம் செலுத்தலாம்.
--------------------
வங்கி விவரம் :
SHAJIDA BOOK CENTRE,
INDIAN OVERSEAS BANK
A/C.NO : 030502000005161 - MUTHIALPET BRANCH
(IFSC CODE : IOBA0000305)
--------------------
சென்னை - மந்தவெளி
ஈத்கா ஜும்ஆ பள்ளிவாசலின் தலைமை இமாம் - பேராசிரியர் K.M. இல்யாஸ் ரியாஜி M.A. அவர்களின் ஆய்வுரை
"அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.
எல்லாப் புகழும் எத்துதியும் வல்லோன் அல்லாஹ் ஒருவனுக்கே! ஸலவாத்தும் ஸலாமும் இறுதித்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களை அணுவணுவாகப் பின்பற்றிய நல்லறத் தோழர்கள், நபிகளாரின் உற்றார் உறவினர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக!
‘அத்திப்புன் நபவிய்யு’ எனும் பெயரில் வேறு சில அறிஞர்களும் நூல்கள் எழுதியுள்ளனர். எனினும் பேரறிஞர் இப்னுல் கய்யிம் அல்ஜவ்சிய்யா (ரஹ்) எழுதியுள்ள இந்நூலே புகழ் மிக்கதும் மேற்கோள் காட்டப்படுவதுமாக அறிவுலகில் ஓர் இடத்தைப் பிடித்திருக்கிறது.
நாம் வாழும் இக்காலம் எல்லாவற்றிலும் Variety-யை (வகைககளை)விரும்பும் காலமாகிவிட்டது. உணவு, உடை, வாழ்விடம், உரைகள், நூல்கள் என எல்லாவற்றிலும் பலவகைகளைத் தேடி விரும்பிச் செல்கின்றனர்.
மருத்துவமும் அப்படித்தான். மக்கள் பலவகை மருத்துவங்களை விரும்புகின்றனர். நாட்டு வைத்தியம் மீண்டும் பேசப்படும் பொருளாகிறது. சீன வைத்தியம் பரவலாக பிரபலமாகிவருகிறது. ஹிஜாமா(Cupping) ஒருபுறம் பிரபலமாகிவருகிறது. தொடு சிகிச்சை, உணவே மருந்து, யோகா என பலவகை மருத்துவங்கள் மக்களை ஈர்த்துக்கொண்டிருக்கும் சூழலில் ‘நபிவழி மருத்துவம்’ எனும் இந்நூல் வெளிவருவது கவன ஈர்ப்பைப் பெறுகிறது.
முதலில் மொழிபெயர்க்கச் சிரமமான இந்நூலை தமிழில் வடித்துள்ளமைக்காக மௌலவி அப்துல் ஹாதி பாகவி அவர்களையும், இவ்வளவு கனமான நூலை வெளியிட முன்வந்திருக்கும் சாஜிதா புக் சென்டர் உரிமையாளர் சகோதரர் முஹம்மது ஜக்கரியா அவர்களையும் மனந்திறந்து பாராட்டுகிறேன்.
நான் இந்நூலை முழுவதுமாகப் படித்தேன். தேவைப்பட்ட சில பகுதிகளை மூலநூலுடன் ஒப்பிட்டும் பார்த்தேன்.
ஜக்கரியாவின் தம்பி அப்துல் மாலிக் இந்நூலை மொழிபெயர்த்து தரும்படி முதலில் என்னிடம்தான் கேட்டுக்கொண்டார். பணிச்சுமை காரணமாக நான் அதை ஏற்கவில்லை. அப்துல் ஹாதி பாகவி சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார்.
மூலிகைகள், செடிகள், மருந்துப்பொடிகள் இவற்றின் பெயரை மொழிபெயர்ப்பது மிகக் கடினம். அதை சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். மூல நூலாசிரியர் சொல்ல விரும்புவதைப் புரிந்து அதை இக்கால வழக்குடன் இணைத்து விளங்கி மொழிபெயர்ப்பது ஒரு கலை. அதையும் சிறப்பாகவே செய்திருக்கிறார்.
மூலநூல் மூன்று பாடங்கள் கொண்டது.
1. நபி (ஸல்) கடைப்பிடித்த மருத்துவம்
2. ஆன்மிக மருத்துவம் (அத்வியத்துர் மூஹானிய்யா)
3. ஒவ்வொரு பொருள்களின் மருத்துவப் பண்புகள்.
ஒவ்வொரு பாடத்தின் கீழும் பல குறுந்தலைப்புகள். அவற்றின் கீழ் ஆழமான தகவல்கள் உள்ளன.
இரண்டாம் பாடம் ஆன்மிக மருத்துவம் என்ற பகுதியில் மூல நூலின் சில பகுதிகள் தமிழில் விடுபட்டுள்ளன.
மேலும் தேன், பேரீத்தம் பழம் பற்றிய பகுதியில் மூல நூலில் இல்லாதவை சேர்க்கப்பட்டிருப்பதாக தோன்றுகிறது.
ஒருவருக்கு வாந்தி வருகிறதென்றால் அதற்கு பத்து காரணங்கள் உண்டு. (பக்கம்:189,190)
யார்? மருத்துவர்? மருத்துவரிடம் இருந்திட வேண்டிய இருபது பண்புகள் (பக்:203,204)
ஜின்களின் பார்வையாலும் கண்திருஷ்டி ஏற்படும் (பக்:235)
கண்ணில்லாதவர் கூட கண்ணேறு ஏற்பட காரணமாவார். (பக்:238)
சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் தூங்கமாட்டார்கள். (பக்:342)
மக்கள் நீதியோடும், நேர்மையாகவும் வாழ்ந்த காலங்கள் விளைந்த பொருள்கள் பெரிதாக இருந்தன. பேரீத்தம் பழக் கொட்டை அளவுக்கு ஒரு கோதுமை இருந்தது. (பக்:450)
கடல்நீரை நன்னீராக, குடிநீராக மாற்றிட செய்ய வேண்டிய இருவழி முறைகள். (பக்:487)
கலங்கலான நீரைப் பருக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் .(பக்:487)
ஆகிய பகுதிகளை வாசிக்கும்போது பிரமிப்பு ஏற்படுகிறது. மூல நூலாசிரியரின் ஆழமான மார்க்க ஞானமும் மருத்துவ அறிவும் பக்கத்துக்குப் பக்கம் பிரமிப்பைக் கூட்டிக் கொண்டே செல்கிறது.
ஆன்மிக மருத்துவம் குறித்த பாடத்தில் நோய்களுக்கும் அதைத் தீர்க்க ஓத வேண்டிய துஆவிலுள்ள வாசகங்களுக்கும் இடையேயுள்ள நுண்ணிய தொடர்பை விவரிக்கும் பக்கங்கள் (288,289,290) வியப்பூட்டுகின்றன.
இந்த பக்கங்களை வாசித்து முடித்தவர்கள் அந்த துஆக்களை ஓதும் போது புதிய ஆன்மிக உலகில் தம் மனம் சஞ்சரிப்பதை உணர்வார்.
உடல் நோய்களுக்கு இணையாக மன நோய்களின் அணிவகுப்பும் இன்றைய உலகின் பெரும் அச்சுறுத்தல்.
சக மனிதன் நேசிக்கப்பட வேண்டும். கருவிகள் பயன்படுத்தப்பட வேண்டும். துர்பாக்கியம் என்னவெனில் கருவிகள் நேசத்திற்குரியவையாகிவிட்டன. மனிதன் கருவி போல் பயன்படுத்தப்படுகிறான்.
எனவே மனநோய்கள் பெருகிவிட்டன. உளவியல் படிப்புகள் அதிகரித்துவிட்டன. உளவியல் வல்லுனர்கள் ஏராளமாகிவிட்டனர்.
மனநோய் குறித்து ஆன்மிகம் கலந்த பார்வையை இந்நூல் முன்வைக்கிறது.
“மனம் விரும்பியபடி செயல்படுவது நோய்களுள் மிகப் பெரியது. மனவிருப்பத்துக்கு எதிராக செயல்படுவதே அதற்கான மிகப்பெரும் மருந்து. மனித ஆன்மா அறிவிலியாகவும் அநியாயம் செய்யக்கூடியதாகவும் படைக்கப்பட்டுள்ளது. அது அறியாமையில் இருப்பதால் மனவிருப்பங்களைப் பின்பற்றுவதில் நிவராணம் இருப்பதாக எண்ணிக்கொள்கிறது. ஆனால் அதில் அழிவும் இழிவும்தான் உள்ளது. நலம் நாடும் மருத்துவரை விரும்பாது” என்று கூறும் நூலாசிரியர்.
மனோவியாதிக்கான காரணங்கள் அதைத் தீர்க்கும் வழிகளையும்
அருமையாக
விளக்குகிறார். (பக்:285,286,287)
நீர் பருகும் ஒழுக்கம், உறங்கும் ஒழுக்கம், உண்ணும் ஒழுக்கம் சேர்த்து உண்ண வேண்டியவை தனித்தனியே உண்ண வேண்டியவை, நறுமணம் பூசுதல் ஆகியவற்றை விஞ்ஞானப்பூர்வமாக அணுகி அறிவார்த்தமாக அவற்றை விளக்குகிறது இந்நூல்.
ஓர் நூலின் வெற்றி அது தன் வாசகர்களை பேதமை மிக்கவர்களாக மாற்றுவதில் இருக்கிறது. வாசகர்கள் இதுவரை கேள்விப்பட்டிராத அரிய நபிமொழிகளையும் புதிய தகவல்களையும் தருவதில் இந்நூல் மகத்தான வெற்றி பெரும் என்பது திண்ணம்.
அவ்வகையில் இந்நூல் சிறப்பானது. வாசிக்க வேண்டியது.
இஸ்லாமிய அறிவுலகம் தந்த உன்னதக் கொடைகளில் ஒருவர் அறிஞர் இப்னுல் கய்யிம் (ரஹ்) இந்நூல் வழியாக தமிழக வாசகர்களையும் அவர் வந்தடைந்திருக்கிறார். இவ்வகையிலும் இந்நூல் வரவேற்க்கப்பட வேண்டியது. வாசித்துப் பயனுற அனைவரையும் வேண்டுகிறேன்."
Blogger Wordpress Gadgets